பள்ளத்தில் விழுந்த வாலிபரை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

கர்நாடகாவில் உள்ள நந்திமலையில் மலையேற்றம் சென்றபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதவித்த வாலிபரை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் மீட்டனர். இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த நிஷாந்த் (வயது 19) என்ற வாலிபர் தனது உறவினர்கள் சிலருடன் நந்திமலைக்கு சென்று இருந்தார். அந்த ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ வீரர்கள், பள்ளத்தில் தவறி விழுந்த நிஷாந்தை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மரத்தில் சிக்கி இருந்த நிஷாந்தை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.