ஹாங்காங்கை ஆட்டிப்படைக்கும் கொரோனா..! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

ஹாங்காங்கில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது. கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து ஹாங்காங்கில் 12,000 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அறிகுறி அற்ற லேசான பாதிப்பைக் கொண்ட கொரோனா நோயாளிகளும் கூட மருத்துவமனைகளில் அட்மிட் ஆக வேண்டும் என ஹாங்காங் அரசு அறிவித்திருந்தது. ஆனால், இப்போது நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், லேசான பாதிப்பு உடையவர்கள் வீடுகளிலேயே இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.