தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?

தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அரசுக்கு பெற்றோர் கோரிக்கை.  இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், நடப்பு கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கோடை விடுமுறை வருகிறது. கொரோனா காலக் கட்டம் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவது சந்தேகமே. அவர்களுக்கு தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்பும் குறைவு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.