கொடைக்கானல் உள்ளாட்சி நகர்மன்ற தேர்தல் விருவிருப்பான ஓட்டு பதிவுகள்..

கொடைக்கானல்:19.2.2022 கொடைக்கானல் மொத்தம் 24 வார்டுகள் இருந்து வருகின்றது சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர் கடந்த பத்து ஆண்டுக்கு பின்னர் இன்று தான் மீண்டும் நகர்மன்ற தேர்தல் நடைபெற்றது .அதில் 18 வயது உள்ளோர். அதற்கு மேற்பட்ட வயதானோர் அனைவரும் ஓட்டுகள் போட்டு தங்களின் ஜனநாயக கடமை ஆற்றினார்.அது சமயம் கொரோனா காலம் என்பதினால் ஓட்டு போட வரும் அனைவருக்கும். கை உரை முகக் கவசங்கள் கிருமி நாசினி கொடைக்கானல் நகராட்சி மூலம் 24 வார்டு மக்களுக்கும் வழங்கப்பட்டது இதனை பயன்படுத்தி மக்கள் சமூக இடைவெளி விட்டும் ஆர்வமுடன் ஓட்டு போட வந்திருந்தனர். ஓட்டுச்சாவடிகளில் கலவரங்கள் ஏதும் ஏற்படாத வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மிகுந்த கவனத்துடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு ஆசிரியர்கள் முன்னிலையிலும் மக்கள் ஓட்டு போட்டு சென்றனர்.

செய்தி கொடைக்கானல் செல்வம்