அ.தி.மு.க.,வினர் கொலுசு வழங்கியதாக தி.மு.க. புகார்..
அரூரில், வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.,வினர் கால் கொலுசு வழங்கியதாக, தி.மு.க., வேட்பாளர் போலீசில் புகார் அளித்தார். தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டில், தி.மு.க., சார்பில், உமாராணி, அ.தி.மு.க., சார்பில் சுகன்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இரவு, 8:30 மணிக்கு தில்லை நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.,வினர் கால் கொலுசு வழங்கியதாகவும், அதனை தடுத்து பிடுங்கிய போது தம்மை அவர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக அரூர் போலீசில் தி.மு.க., வேட்பாளர் உமாராணி புகார் அளித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.