ரயில்வே ஊழியருக்கு குவியும் வாழ்த்து!!!
திருச்சி ரயில்நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட 31 சவரன் நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ரயில்வே அஞ்சலக ஊழியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் 31 சவரன் நகை அடங்கிய பை ஒன்றை தவறவிட்டுச்சென்றுள்ளார். அந்த பை அவ்வழியாக சென்ற திருச்சி ரயில்வே அஞ்சலக அலுவலகத்தில் பணிபுரியும் கிஷோர்குமார். கண்ணில் பட்டுள்ளது. அதனை எடுத்து பார்த்த அவர், அதில் தங்க நகைகள் இருப்பதை அறிந்து திருச்சி இரும்புப்பாதை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.