அமெரிக்காவில் எச்.ஐ.வி. பிடியில் இருந்து குணம் அடைந்த முதல் பெண்

எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. பிடியில் இருந்து அமெரிக்காவில் முதன்முதலாக ஒரு பெண் குணம் அடைந்துள்ளார். இவர் லுகேமியா என்று அழைக்கப்படுகிற ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் ஆவார். இவருக்கு ரத்தப்புற்றுநோயை சரி செய்வதற்காக சிகிச்சையின் ஒரு அம்சமாக, தொப்புள் கொடி மாற்று அறுவை சிகிச்சையை 2017-ம் ஆண்டு டாக்டர்கள் மேற்கொண்டனர்.இது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி.க்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தியைத் தந்து குணப்படுத்தி இருக்கிறது. அவர் இனிமேல் எச்.ஐ.வி.க்கு ‘ஆன்டிரெட்ரோவைரல்’ சிகிச்சையை எடுக்க வேண்டியதில்லை என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். அவர் கடந்த 14 மாதங்களாக இந்த வைரசில் இருந்து விடுபட்டுள்ளார். இதுகுறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கையில், ‘‘எச்.ஐ.வி.க்கு எதிராக ஒருவர் நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்க முடியும்’’ என்று கூறினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.