ஆத்தூரில் தனியார் தங்கும் விடுதியில் 160 மிக்சி பறிமுதல்..

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் பறக்கும் படை அலுவலர்கள் தனியார் தங்கும் விடுதியில் ஆய்வு செய்தனர். அப்போது 160 மிக்சிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். மிக்ஸிங் பறிமுதல் செய்தவர்களுக்கு அதை பதுக்கிய கட்சி/வேட்பாளர் யார் என்று தெரியாமலா போகும்? தேர்தல் “கமிஷன்” நேர்மையாக பணியாற்றினால், அந்தக்கட்சியை பற்றிய உண்மையை உடனே வெளியிட்டு மக்களுக்கு தெரிவித்தால் தான், தேர்தல் கமிஷன் நடுநிலையான அமைப்பு என்ற நம்பிக்கை வரும். மேலும் உடனுக்குடன் உண்மையை வெளியிட்டால், மக்களும் தங்கள் ஓட்டு உரிமையை சரியான முறையில் பயன்படுத்துவார்கள். இல்லாவிடில் தேர்தல் கமிஷனும் ஆளுங் கட்சியின் இன்னொரு அடிமைதான் என்று எண்ணத் தோணும் .

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.