இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை!!!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அஹி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எக்கோ, அஹி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.