ஹிஜாப் அணிய விடாமல் தடுப்பவர்கள் வெட்டப்படுவர் – காங். தலைவர் பேச்சு

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவரான முகரம் கான் கலபுகி என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது, ஹிஜாப் விவகாரம் குறித்து முகரம் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், அவர்கள் என்ன உடை அணிகிறார்கள்?. அவர்கள் காவி உடை அணிந்துகொண்டு ஹிஜாப்பை கழற்றுக்கள் என்று நமது குழந்தைகளிடம் கூறுகின்றனர். ஹிஜாப் அணிய தடை விதிக்கின்றனர். நமது குழந்தைகளை ஹிஜாப் அணியவிடாமல் தடுப்பவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவர்’ என்றார். ஹிஜாப் அணிய விடாமல் தடுப்பவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்படுவர் என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த முகரம் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.