47 தமிழக மீனவா்கள் இன்று சென்னை வந்தனர்..!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலையான 47 தமிழக மீனவா்கள் இன்று சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை அந்நாட்டு நீதிமன்றம் ஜனவரி மாதம் விடுதலை செய்தது. இலங்கை கடற்படை கைது விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 47 மீனவர்கள் இலங்கையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.