ரஷ்ய படைகள் திரும்புவது உறுதி படுத்தப்படவில்லை – நேட்டோ தகவல்

ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதை தணிக்க அமெரிக்கா உள்பட பல்வேறு கூட்டணி நாடுகள் முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என ரஷியா தெரிவித்தது. ஆனால் உக்ரைன் எல்லையில் உள்ள கிரிமியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.