போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றம் செய்த வி.ஏ.ஓ. !!

நாகையில் போலி ஆவணங்கள் மூலம்,கோயில் இடத்தை பட்டா மாற்றம் செய்த விஏஓ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 3 பேர் மீது நாகை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். புத்தூர் பகுதி விஏஓ செல்வம். இவர் புத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.46 லட்சம் மதிப்பிலான 214 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தை கடந்த 2020ம் ஆண்டு போலியாக ஆவணங்கள் தயார் செய்து அவரது தாயார் மலர்க்கொடிக்கு பட்டா செய்து கொடுத்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.