தூத்துக்குடி மாநகராட்சியை கைப்பற்றப் போவது யார்?

8 முனை போட்டிகள் நிலவினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் 47 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன. 8 முனை போட்டிகள் நிலவினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் 47 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன. இதுவரை மேயர் வேட்பாளர்களை கட்சிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்துள்ளார். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை தூத்துக்குடியில் இன்று ஈடுபட்டுள்ளார். இவர்களின் பிரசாரம், ஆளும்கட்சி உள்ளிட்டவை தி.மு.கவிற்கு சாதகமாக உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.