பிடிஆர் போடும் மாஸ்டர் பிளான்….
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலை ஒட்டி திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டுள்ள பிளான் குறித்து தகவல்கள். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி, மதுரையில் திமுகவின் கையே ஓங்கியிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மதுரை கிழக்கு எம்.எல்.ஏ பி.மூர்த்தி, மதுரை வடக்கு எம்.எல்.ஏ ஜி.தளபதி, மதுரை தெற்கு எம்.எல்.ஏ எம்.பூமிநாதன், மதுரை மத்திய எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன், மதுரை மேற்கு எம்.எல்.ஏ செல்லூர் கே.ராஜூ ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.