உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்….

வேலைவாய்ப்பில் உள்ளூர் நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல மாநிலங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரியானா மாநிலம், அந்த மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை 75 சதவீதம் வேலையில் அமர்த்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. அரியானா மாநில உயர்நீதிமன்றமும் இதை வலியுறுத்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, அரியானா மாநில உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். மேலும், முதலாளிகளுக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.