மம்தாவுக்கு மேற்கு வங்காள ஆளுநர் கடிதம்

கவர்னர்களால் சட்டசபை கலைக்கப்படும் என்ற அச்சம் நிலவி வந்தது. இந்த நிலையில், பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என மம்தா பானர்ஜிக்கு தன்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘நிலுவையில் உள்ள பிரச்சினைகளை இந்த வார இறுதியில் பேசி தீர்ப்போம், முதல்வரின் நிலைப்பாட்டின் காரணமாக, தான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்கவில்லை. பல்வேறு கவலை மிகுந்த அம்சங்கள் குறித்து அவசரமான ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இந்த வார இறுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் கலந்துரையாடல் மேற்கொள்ளலாம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.