சிலுவை ஜெபமாலை கிறிஸ்துவ மத அடையாளத்தை கையில் எடுத்த பாஜக!!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கிறிஸ்துவ மத அடையாள பொருட்களை வழங்கி பாஜக வேட்பாளர் ஒருவர் பிரச்சாரம் செய்து வந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் பாஜக வேட்பாளர் பெரியசாமி கிறிஸ்துவ மத அடையாளம் உள்ள பரிசு பொருட்களை வழங்கி பிரச்சாரம் செய்தார். 8வது வார்டில் இவை போட்டியிடுகிறார். அந்த வார்டில் அதிக அளவில் கிறிஸ்துவர்கள் வசிக்கிறார்கள். சமீபத்தில் அரியலூர் மாணவி வழக்கில் கிறிஸ்துவர்களை பாஜக விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கிறிஸ்துவர்கள் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.