கல்லூரி விடுதியில் சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு..!

இமாச்சலப்பிரதேசம் தரம்சாலாவில் உள்ள அரசு முதுநிலை கல்லூரியில் உள்ள விடுதியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு விடுதியில் உள்ள மெஸ்ஸில் சாப்பிட்ட பிறகு ஒரு சில மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.