புல்லட்டில் திமுக கொடி – வாக்கு கேட்ட ருமானி நாட்டுக்காரர்!!
கோவை: தொழில் நிமித்தமாக இந்தியாவுக்கு வந்த ருமானியா நாட்டுக்காரர் திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கழுத்தில் திமுக கழக துண்டை அணிந்திருந்தார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு திமுகவுக்கு வாக்கு அளிக்கக் கோரும் துண்டு பிரச்சாரங்களை வழங்கினார். அவரது பெயர் ஸ்ரீஃபன் நெகொய்டா. இவர் ருமானியாவிலிருந்து இந்தியாவுக்கு தொழில் நிமித்தமாக வந்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.