ஆயுதத்தை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடையா? – அமெரிக்கா பதில்

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை ஆகியவற்றை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.சுமார் ரூ. 40 ஆயிரம் கோடிக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் முதல் தொகுப்பை இந்தியாவிடம் ரஷியா ஒப்படைத்துள்ளது. இந்த முதல் தொகுப்பை பஞ்சாப் செக்டார் பகுதியில் பாதுகாப்பு படை நிலை நிறுத்தியுள்ளது.இதற்கிடையில் ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை இந்தியா வாங்க அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.