ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை -அமெரிக்கா குற்றசாட்டு!

உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது உள்ள நிலையில், உக்ரைனின் கிரிமியா பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டது. உக்ரைன் – ரஷ்ய எல்லைப்பகுதியில் ரஷ்யாவின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படைகளை கடந்த ஒரு மாத காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை நிலவியது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதாக கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்த ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அது தொடர்பான வீடியோவையும் ரஷ்யா பகிர்ந்து கொண்டது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.