பீகாரில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு!!!!

சாயத்துக்காக அவுரிச்செடியை கட்டாயமாக பயிரிட உத்தரவிட்ட ஆங்கில அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி, 1917-ம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பாரனில் சத்தியாகிரக இயக்கத்தை தொடங்கினார்.அதை நினைவுகூரும்விதமாக இங்குள்ள ராட்டை பூங்காவில் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை நேற்று முன்தினம் இரவு உடைத்து கீழே தள்ளப்பட்டிருந்தது.இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் அன்றைய இரவு மதரீதியிலான முழக்கங்கள் கேட்டதாகவும், எனவே மதச்சார்பு குழுக்கள்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வந்தன..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.