மக்களை தேடி மருத்துவ திட்டம்: மு.க.ஸ்டாலின் நேரில் மருத்துவ உதவி..
வருகிற ஞாயிற்றுக்கிழமை 50-வது லட்சம் பயனாளிக்கு முதல்-அமைச்சரே வீடு தேடி சென்று மருத்துவ உதவிகளை வழங்க இருக்கிறார். மக்களை தேடி மருத்துவ முகாம் மூலம் இதுவரையில் 49 லட்சத்து 79 ஆயிரத்து 565 பேர் பயனடைந்துள்ளனர். தினமும் 15 முதல் 20 ஆயிரம் பேர் பயன் பெறுகிறார்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை 50-வது லட்சம் பயனாளிக்கு முதல்-அமைச்சரே வீடு தேடி சென்று மருத்துவ உதவிகளை வழங்க இருக்கிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.