சமூக நல்லிணக்கமே பா.ஜ., அரசின் சிந்தனை

மும்பை: சமூக நல்லிணக்கத்தை உள்ளடக்கிய வளர்ச்சி என்பது பா.ஜ., அரசின் சிந்தனையில் ஊறியது என நாஸ்காம் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கான வர்த்தக சங்கமாக நாஸ்காம் உள்ளது. நாஸ்காம் டெக் சி.இ.ஓ., ஆய்வு 2022ஐ தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இதில் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாஸ்காம் தலைவர் தேப்ஜனி கோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய தொழில்நுட்பத் துறையானது 2022 நிதியாண்டில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளதாக நாஸ்காம் தலைவர் தெரிவித்தார். இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அதிகம். அடுத்த சில ஆண்டுகளில் இம்மதிப்பானது 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.