காலை, மாலை நேரங்களில் மாணவர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொன்னேரி பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். பொன்னேரி பஸ் நிலையத்தில் நேற்று மாலை பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிலர் கும்பலாக நின்றனர். திடீரென அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்டனர். மேலும் கல்வீசியும் தாக்கிக் கொண்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

About The Author