தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது!!!
உரிய அனுமதியின்றி அஜித் தோவல் வீட்டுக்குள் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டெல்லி ஜன்பாத் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இன்று காலை அஜித் தோவலின் வீட்டுக்குள் காரில் வந்த நபர் அத்துமீறி நுழைய முயன்றார். காரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அந்த நபரிடம் விசாரித்தனர். உரிய அனுமதியின்றி அஜித் தோவல் வீட்டுக்குள் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.