கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யா சென்ற பிரேசில் அதிபர்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று ரஷ்யாவுக்கு சென்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இன்று ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ளார். ஐரோப்பிய நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் அதன் எல்லைப்பகுதியில் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ரஷ்யாவுக்கு வந்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.