இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு சமரசத்தை எட்டியது..

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடுத்திருந்த வர்ஜீனியா கியூஃப்ரே சமரசம் செய்து கொண்டார்.இதுதொடரபாக கியூஃப்ரேவின் வழக்கறிஞர் டேவிட் பாய்ஸ், மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இரு தரப்பிலும் உள்ள வழக்கறிஞர்கள், கொள்கையளவில் ஒரு தீர்வுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர். சட்ட நடைமுறைகளை முறைப்படி மேற்கொண்டு, இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாக  டேவிட் பாய்ஸ் (Attorney David Boies) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.