மருத்துவரின் குடும்பத்தை கட்டி போட்டு – கொள்ளையடித்த கும்பல்!!

ஒட்டன்சத்திரத்தில் பிரபல மருத்துவரின் குடும்பத்தினை கட்டிபொட்டு 280 சவரன் நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் மருத்துவரான சக்திவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை நேரத்தில் அவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்ததாக சொல்லப்படுகிறது. அதில் வீட்டில் உள்ள அனைவர்களையும் கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வீட்டின் முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.