கொடைக்கானல் 59ஆவது மலர் கண்காட்சி : இறுதிகட்ட பணிகள் தீவிரம் !!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 2019 ஆம் ஆண்டு 58 ஆவது மலர் கண்காட்சி நடைபெற்றது.  அதன் பின்னர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகள், கொரோனா பெருந்தொற்றால் மலர் கண்காட்சி நடத்த முடியாத நிலை இருந்தது. இந்த ஆண்டும் மூன்றாவது அலையால் மலர்க்கண்காட்சி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருடத்தின் துவக்கத்திலேயே மூன்றாவது அலை துவங்கி, நல் வாய்ப்பாக தற்பொழுது மூன்றாவது அலை முடிவுறும் நிலை உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடை பருவமும், கோடை விழாவும், அதன் முக்கிய நிகழ்ச்சியான 59 ஆவது மலர்க்கண்காட்சியும், நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.