வெளிநாட்டு பயணிகள் வருவதை தடை செய்யும் ஜப்பான்!
வெளிநாட்டு பயணிகள் வருவதை தடை செய்யும் ஜப்பான்!
பிரிட்டனிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகளைத் தடை செய்வதாக, ஜப்பான் அறிவித்துள்ளது. தற்போது பிரிட்டனில் பரவி வரும் புதிய வகைக் கொரோனா கிருமித்தொற்று, ஜப்பானுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தோக்கியோ அந்த முடிவை எடுத்துள்ளது. தடை, நாளை முதல் நடப்புக்கு வருகிறது. ஜப்பானியர்களையும், பிரிட்டனுக்கான பயணத்தைத் தள்ளி வைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது. புதிய வகைக் கொரோனா கிருமித்தொற்று காரணமாக, சில நாடுகள் ஏற்கெனவே பிரிட்டனுடனான எல்லைகளை மூடிவிட்டன.
பிரிட்டனிலிருந்து ஜப்பானுக்குத் திரும்பி வரும் நீண்ட நாள் அனுமதி அட்டை கொண்டவர்கள் 14 நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதுபோக, அடுத்த வாரம் முதல் பிரிட்டனிலிருந்து நாடு திரும்பும் ஜப்பானியக் குடிமக்கள், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு COVID-19 பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதில் கிருமித்தொற்று இல்லை என்ற சான்றிதழை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
S. செந்தில்நாதன் இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.