கலையரசன் அறிக்கையை சூரப்பாவிற்கு வழங்க உத்தரவு!!
சென்னை: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை கடந்த அ.தி.மு.க., அரசு நியமித்திருந்தது. இதனை எதிர்த்து சூரப்பா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. விசாரணை குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த விசாரணை அறிக்கையை சூரப்பாவிற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அறிக்கை தொடர்பான விளக்கத்தை நான்கு வாரங்களில் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.