கடத்தப்பட்ட தலித் பெண்….
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி 22-வயது மதிக்கத்தக்க தலித் பெண் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் தலித் பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உ.பி.யின் முன்னாள் அமைச்சர் மறைந்த ஃபதே பகதூர் சிங்கின் மகன் ராஜோல் சிங் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், ராஜோல் சிங்கிற்கு சொந்தமான ஆசிரமம் அருகில் இருந்து தலித் பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. சிதைந்த நிலையில் இருந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.