திருச்செந்தூர் கோவிலில் இன்று மாலை தீபாராதனை
மாசித்திருவிழா 5-ம் நாளான இன்று மாலை திருச்செந்தூர் கோவிலில் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருநாளான 16-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி சுவாமி, அம்பாள் காலை, மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.