நானும் இஸ்லாமிய பெண்தான்..- பாஜக குஷ்பு

ஹிஜாப் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில், கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல எனவும், தான் பள்ளிக்கூடம் சென்ற போது ஹிஜாப் அணியவில்லை, அணிந்து வந்த மாணவிகளையும் பார்த்ததில்லை என நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு,” கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் பற்றியது. பள்ளியில் சீருடை அணிந்ததற்காக நான் நம்புகிறேன். விதிகள் n அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காக. ஹிஜாவ் விவகாரத்தில் அரசியலில் செய்வது அவமானம்.” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.