40 செயற்கை கோள்களை அழித்த மின் காந்தப் புயல்

வாஷிங்டன்:அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சில தினங்களில், 40 செயற்கை கோள்கள், திடீரென ஏற்பட்ட மின்காந்தப் புயலால் எரிந்து சாம்பலாயின. அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர்எலான் மஸ்க்கின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி சுற்றுலா, இணைய சேவை உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. செயற்கை கோள்கள் எரிந்து சாம்பலானது துரதிர்ஷடவசமானது. உடைந்த செயற்கை கோள் பாகங்களால், இதர செயற்கை கோள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எரிந்த பாகங்கள் பூமியில் விழுந்தும் பாதிப்பை ஏற்படுத்தாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.சில சமயம் சூரியனில் இருந்து வெளிப்படும் அளவிற்கதிகமான வெப்பம்தான் மின் காந்தப் புயலாக மாறி பூமியின் வளி மண்டலத்தை தாக்குகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.