உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மாநில போலீசாருடன் 50 ஆயிரம் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.