கேரளாவில் கைத்தறி ஆடை அணிய உத்தரவு
கேரளாவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன் கிழமைகளில் அலுவலகத்திற்கு கைத்தறி ஆடை அணிந்து வரவேண்டும். இந்த நடைமுறையை எம்.எல்.ஏ.க்களும் பின்பற்றலாம். இதன்மூலம் கைத்தறி தயாரிப்பு மேம்படும். இதுபோல அரசு நிறுவனங்கள் ஏதாவது பொருள்கள் வாங்கும்போது, கைத்தறி தயாரிப்பு பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்காக கேரளாவில் மேலும் 75 புதிய கைத்தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். காக்கநாட்டில் சர்வதேச தரத்திலான கண்காட்சி மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.