அரவிந்த் கெஜ்ரிவால் சூறாவளி பிரச்சாரம்

பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிடுவதால், அங்கு வாக்கு சேகரிக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியும், மகளும் செல்கின்றனர். நாட்டில் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்திற்கான சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அடுத்ததாக, கோவா மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் அத்மி உள்ளிட்ட கட்சிகள்  போட்டியிடுகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.