ஈராக்கில் வான்தாக்குதல் – 7 பேர் பலி

ஈராக்கில் கடும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க படைகளின் உதவியோடு தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் சமீபகாலமாக அங்கு மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. குறிப்பாக நாட்டின் வடக்கு பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது. அந்த வகையில் வடக்கு மாகாணம் நினிவேவில் உள்ள ஹத்ரா பாலைவனத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி வான்தாக்குதல் நடத்தியது.இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களின் தலைமையகமாக பயன்படுத்தி வந்த 140 மீட்டர் நீளம் கொண்ட குகை குண்டு வீசி அழிக்கப்பட்டது. மேலும் இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.