பரிசோதனையில் வெளிவந்த உண்மை…. ஷாக்கான தம்பதியினர்….!!

அமெரிக்காவிலுள்ள கிலீவ்லாந்து என்ற இடத்தில் ஜனன், ஜான் மைக் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வாரிசு இல்லை என்பதால் ஒரு அழகான பெண் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பதியினர் கருத்தரிப்பு மையம் ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் இருவருக்கும் தெரியாமலேயே ஜனனிற்கு அவருடைய கணவரான ஜான் மைக்கலின் விந்தணுவிற்கு பதிலாக மற்றொருவரின் விந்தணு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 30 வருடங்களுக்கு பின்பு தங்களுக்கு பிறந்த ஜெசிக்காவிற்கு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவர் தனது வாரிசுயில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.