அடையாளம் தெரியாத வாகனம் மோதி – போலீஸ்காரர் பலி…
குன்றத்தூர் அருகே ரோந்து பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் (23). இவர், குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீஸில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலை, சிறுகளத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.