வாரிசு அரசியல்: மோடி விமர்சனம்!!!!
புதுடெல்லி: மாநிலங்களவையில் அதிபர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்றி னார். தேசம் என்பது மாநிலங்க ளின் ஒருங்கிணைந்த உருவமே என ராகுல் காந்தி பேசியதற்கு மோடி பதிலடி கொடுத்தார். “வாரிசு அரசியலால் ஜனநாயகத் திற்கு ஆபத்து. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது; ஊழல் இருந்தி ருக்காது; நெருக்கடி நிலை இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை ‘ஃபெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ்’ என மாற்றிக்கொள்ளுங்கள்,” என்றார் மோடி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.