மோடி- யோகி மேஜிக் படத்துடன் புடவைகள்!!!

உத்தரப்பிரதேச தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், பிராண்ட் மோடி -யோகி என்ற திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது பாஜக. மோடி மற்றும் யோகியின் மேஜிக் என்று இதை பாஜவினர் சொல்கின்ற‌னர். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய, 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வழங்கி, தினக்கூலிகளை பணியமர்த்தி, மோடி படம் போட்ட புடவைகளை அணிந்துகொண்டு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். அதேபோல், மோடி மற்றும் யோகியின் பெருமையை சொல்லும் விதமாக பாடல்களைப் பாடியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் மீனா.