ஆப்கன் பெண்கள் சந்திக்கும் துயரங்கள்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரப் பொறுப்பிற்கு வந்த பின் பெண்களுக்கு என அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் மிக மோசமாக உள்ள நிலையில், தற்போது தாலிபான்கள் கூட்டமாகச் சென்று பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது, நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியவர்கள் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பையும் தடுத்துள்ளனர். தொடர்ந்து அந்நாட்டு சிறுமிகளுக்கு கல்வி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.