1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – அரசு அறிவிப்பு!
1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்துமாறு பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி