முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க 5 நிமிடத்தில் போதும்…!!!!

5 நிமிடத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் கொடுக்கப்பட்டுள்ளது.

முட்டை வெள்ளைக்கருமுட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இச்சத்து சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், சரும ஆரோக்கியமடைந்து, பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். எலுமிச்சை சாறுஎலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு – 1

தயாரிக்கும் முறை: ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பயன்படுத்தும் முறைஇந்த கலவையை முகம், கழுத்து, கைகளில் தடவி மென்மையாக விரலால் மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.எத்தனை முறை செய்ய வேண்டும்?இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள முதுமை சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சாந்தினி.