நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்யம்!!!!!

நடைபயிற்சி எனும் நலக் கண்ணாடி. இனி வரும் காலத்தில் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நடைப்பயிற்சி அத்தியாவசியம்!

உடலுக்குள் அவலங்கள்.

ரத்தக்குழாய்களில் தடிமனாகப் படிந்துள்ள கொழுப்புத் திட்டுக்கள், பானையைப் போன்ற வயிறு, சூரிய ஒளி பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் வைட்டமின் – டி குறைபாடு, நெகிழ்வாக இருக்க வேண்டிய மூட்டுப் பகுதிகள் அசைவின்றிக் கடினமாக மாறிவிட்ட அவலம், உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் திறன் குறைபாடு, உறக்கமின்மை எனும் மனரீதியான துன்பம், கஷ்டப்பட்டு உறங்கினாலும், மறுநாள் காலையில் ஏற்படும் கடுமையான உடற்சோர்வு, இயற்கையாக நிகழ வேண்டிய கழிவு நீக்க முறைகளில் பெரும் தடை, திக்கித் திணறும் செரிமானம் என எண்ணிலடங்காத உடல்ரீதியான திண்டாட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நோய்களின் தலைமுறை.

முறையான உடற் பயிற்சி இல்லாமல் நடுத்தர வயதினருக்கே ஏற்பட்டுவரும் நவீன கால உபாதைகள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி. உடல் உழைப்புக் குறைபாட்டால் மேற்சொன்ன விபரீதங்களை இந்தத் தலைமுறை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

நோய்களின் அறிக்கை.

பெரும்பாலானோர் நடைப்பயிற்சி செய்வ தில்லை. காரணம் சொகுசான வாழ்க்கை, வேலைப் பளு. இதிலிருந்து எப்படி மீள்வது? மனோதிடத்துடன் உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்! விழித்துக்கொள்ளவில்லை எனில் நோய் வருகையை அறிவிக்கும்.

நலக் கண்ணாடி.

நடைப்பயிற்சி என்பது உடல் எவ்வகையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் நலக் கண்ணாடி! நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, இயல்பைவிட அதிக அளவில் மார்புப் படபடப்போ, மூச்சு வாங்கும் அறிகுறியோ, வேறு அறிகுறியோ தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதால், நம்மிடம் உடல் என்ன சொல்ல வருகிறது என்பதைக் கேட்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.

10,000 அடிகள் நடக்க

எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.365 நாட்கள் நடைபயிற்சிஉங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும்

கைப்பேசி இன்றி நடப்போம்.

வாய்ப்பிருந்தால் கைப்பேசி துணையில்லாமல் நடை ப்பயிற்சி சென்று வாருங்கள். வார்த்தைகளை வழங்குவதைப் போல, அனைவருக்கும் மகிழ்ச்சியான புதுப்புது சிந்தனைகளை மலரச் செய்து மனத்துக்குப் புத்துணர்வு அளிக்க நடைப்பயிற்சி துணை நிற்கும். அதே நேரம், முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தொடர்புக்காக அலை பேசியை வைத்துக்கொள்வதில் தவறில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.