ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்…

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 50 பேர் சரண் அடைந்து உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.  இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில் 500 டேயீஸ் பயங்கரவாதிகள் (ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே) சரண் அடைந்தனர். இந்நிலையில், அந்நாட்டின் நங்கார்ஹர் கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 50 பேர் சரண் அடைந்து உள்ளனர்.  பழங்குடி தலைவர்களின் முயற்சியால் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.